NNN Sunday School Teachers Training 2025
ஓய்வு நாள் பாடசாலை : சீர்காழி பணித்தளங்கள்
நல்ல நிலமாகு நண்பா ஊழியமானது சீர்காழி பகுதிகளில் சிறுவர் ஊழியத்தை சிறப்பாக செய்து வருகிறது. NNN சபை ஆராதனை நடைபெறும் பகுதிகள் மட்டுமில்லாது வாய்ப்பிருக்கும் கிராமங்களிலும் ஓய்வுநாட் பள்ளியை நடத்தி வருகிறது. அப்படியாக மொத்தம் 9 இடங்களில் இப்பணிகள் நடைபெறுகிறது.
NNN ஊழியமானது Sunday School திருப்பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சிறுவர் ஊழியம் தானே என்று நிர்விசாரமாய் இருக்காமல், 9 கிராமங்கள் தானே என்று யோசிக்காமல், அதற்கென்று மெனக்கெட்டு பாடங்களை ஒழுங்கு செய்து நான்கு நிலை புத்தகங்களாக வெளியிடப்படுகிறது. ஏன் தனியாக புத்தகம் வெளியிடுகிறோம் என்றால், சீர்காழி பிள்ளைகளின் திருமறை உள்வாங்கும் திறனை கணக்கிட்டு அப்பகுதிக்கேற்ற முறையில் பாடங்களை விளக்கவே தனியாக புத்தகம் வெளியிடுகிறோம்.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறுவர் ஊழியம் தற்போது இரண்டாம் ஆண்டில் பயணிக்கிறது.
- 2024 ஆண்டு பயனடைந்த பிள்ளைகள் : 205
- 2025 ஆண்டு பயனடைந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் : 275
- 4 பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது
- மிஷனரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு மாதம் 500 ஊக்கத் தொகை வழங்கப்பகிறது
- அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு நடக்கும் நாட்களில் சிறிய இனிப்புகள் வழங்கப்படுகிறது.
- தேர்வு முறைப்படி நடத்தப்படுகிறது
- இடமில்லாத இடங்களில் சாலைகளிலும் தெருக்களிலும் வகுப்புகள் நடைடபெறுகிறது
- இதற்கு பரிசுகள் உண்டு
அதற்கான ஆசிரியர் பயிற்சி 25- 2 - 25 மற்றும் 26-2-25 ஆகிய தினங்களில் நடைபெற்றது. புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு நாட் பள்ளி 2025 -ம் ஆண்டு புத்தகங்கள். NNN பொருளாளர் திரு. கிங்ஸ்லி அவர்கள் ஜெபித்து வெளியிட்டார்கள்.
நன்றி: குறிப்பாக இந்த ஞாயிறு பள்ளி ஊழியத்தை மாதம் தோறும் 500, 200, 100 என உதவி செய்து வருகின்ற அத்தனை பேருக்கும் நன்றி.
நன்கொடை அனுப்ப.....
Acc Name: NALLA NILAMAGU NANBA MINISTRIES TRUST.Bank: INDIAN OVERSEAS BANK.
Branch: Verkilambi .
Acc Number: 353701000010503.
IFSC : IOBA0003537
MICR: 629020035.
UPI : nallanilamagu@IOB
Google Pay : 9486954577 Name : Merlin S
.png)
.jpg)
.jpg)

.png)

Comments
Post a Comment