முன்னணை மாற்றுவோம்
குடில் -004
தனக்கு வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை கிறிஸ்துவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தால் தன் சொந்த நிலத்தை விற்றும் உதவிகள் பெற்றும் 500 பேர் கூடுமான ஆலயத்தை கட்டிய போதகர் Pr. ஜஸ்டின் ராஜ் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் புகைப்படங்களைப் பாருங்கள்
.png)
இரண்டு வாலிப பிள்ளைகளுடன் இக்குடிசையில் வாழும் நிலைமையைப் பார்த்து நாங்கள் மனம் வருந்தாமலும் இல்லை. பாம்புக்கள் வருதல், மழைவெள்ளம் புகுதல், இடிந்து விழுமோ என்னும் அச்சம், உடைமாற்று தனி இடம் இல்லாமை என அவர்கள் படும்பாடுகள் பல...
நல்ல நிலமாகு நண்பா ஊழியத்திற்கு பணித்தளங்களை சீர்காழியில் காண்பித்து கொடுத்த இவர்தான் இன்று NNN ஊழியத்தின் சீர்காழி பணித்தளங்களின் மேற்பார்வையாளராக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இவர்கள் வீட்டைக் குறித்த பாரம் எங்களுக்கு இருந்தாலும் பணித்தள காரியங்களின் அடித்தளமான காரியங்களைப் பார்ப்பதிலே பொருளாதாரம் அதிக தேவையாய் எங்ளுக்கு இருந்தது. தற்போது அவர்களுக்கான வீட்டின் காரியத்தை காலம் தள்ளிப் போட முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.
இவ்வளவு ஊழிய ஆர்வம், அர்ப்பணிப்பு, எளிமை உள்ள ஊழியருக்கு உதவாமல் நாம் பணித்தளங்களில் வேறு காரியங்களை செய்வது மட்டும் கர்த்தருக்கு பிரியமாகாது என்பதை உணர்ந்தோம். 15- வருடங்கள் அவர் இப்படிப்பட்ட வீட்டில் இருந்தது போதும் இனி அவர்களுக்கு நாம் இணைந்து நல்ல வீட்டை கொடுக்க வேண்டியது இறை சித்தமாகும்.
எனவே நல்ல நிலமாகு நண்பா ஊழியத்தின் முன்னணை மாற்றுவோம் திட்டத்தின் வழியாக 4-வது குடிலாக pr. Justin raj அவர்களுக்கு இல்லம் கட்ட தீர்மானித்தோம்
முன்னணை மாற்றுவோம் திட்டம் பற்றி
முன்னணையில் பிறந்த இயேசுவின் நிலைமையை பார்த்து பரிதபிக்கும் நாம். இன்றும் முன்னணை போன்ற வசதியற்ற குடிசைகளில் வசிக்கும் மக்களை கண்டு நாம் பரிதபிக்காமல் இருப்பது ஏனோ?. இக்கேள்வி எங்களுக்குள் எழும்பியதாலே நல்ல நிலமாகு நண்பா ஊழியத்தின் சார்பாக முன்னணைகளை மாற்றுவோம் என்ற பெயரில், வீடில்லாத ஏழைகளுக்கு சிறிய வீட்டை கட்டிக் கொடுப்பது என்ற தரிசனத்தோடு பயணம் செய்ய விரும்புகிறோம். அப்படி இதுவரை 3 வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். தொடர்ச்சியாக போதகா் அவா்களுக்கு குடில் -004 என்ற பெயரில் வீடு கட்டி கொடுக்க தீா்மானித்திருக்கிறோம்.
எனவே இந்த திட்டத்தில் நீங்களும் இணைந்து அன்பு போதகர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவி செய்யுங்கள்
கிறிஸ்துவுக்கு உண்மையாய் சுயநலமற்று ஊழியம் செய்கின்ற அன்பு போதகருக்கு, நல்ல இல்லத்தில் வாழ உதவி செய்வது கிறிஸ்துவுக்கு நாம் செய்யும் நன்றியாகவே இருக்கும்.
உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது:
நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது பிறரை ஆசீர்வதிக்கவே என்பதை மறந்து வீடாதீர்கள்.
நீங்கள் கிறிஸ்துவால் ஏவப்பட்டால் மற்றும் உற்சாக மனநிலை உருவானால், இப்பணிக்கு உதவிசெய்யுங்க. ள்
முழுக்க முழுக்க ஏழைகள் மீதுள்ள இரக்கத்தினாலே இப்பணி செய்யப்படுகிறது.
காணிக்கை வரவர பணிகள் ஆரம்பித்து நடக்கும் இந்த வீட்டை கிறிஸ்மஸ் பரிசாக அவர்களுக்கு கொடுக்க தீர்மானிக்கிறோம்.
நன்கொடை அனுப்ப கீழ்காணும் அக்கவுண்ட் அல்லது QRcode அல்லது gpay or phone pay வழிகளைத் தேர்ந்தெடுங்கள்
காணிக்கை அனுப்பியவர்கள் தயவு செய்து விபரங்களை 8668647378 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்புங்கள்
Bank: INDIAN OVERSEAS BANK.
Branch: Verkilambi .
Acc Number: 353701000010503.
IFSC : IOBA0003537
MICR: 629020035.
UPI : nallanilamagu@IOB
Google Pay : 8668047378
phone Pay : 8668047378
அன்புடன்
Bro. மெர்லின்
இயக்குநர், நல்ல நிலமாகு நண்பா டிரஸ்ட்.
குடில் -001 - உங்கள் பார்வைக்கு




Comments
Post a Comment