வைக்கோலுக்காக!
வைக்கோலுக்காக!
ஒருவன் தன் நிலத்தில் உழவு செய்து நெல்மணிகளை விதைத்தான். அங்கு நெற்கதிர்கள் பச்சைப் பசேலாய் முளைக்க ஆரம்பித்ததும் அங்கிருந்த மாடு " என் முதலாளி எனக்கு உணவளிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு பயிர்களை விளைவிக்கிறார் " என சிந்திக்கத் துவங்கியது. அதனுடைய பார்வையில் தனக்கு வைக்கோல் தருவதற்காகவே முதலாளி பயிர் செய்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இருந்தது, பயிர் வளர வளர அவன் நெற் பயிரின் இலைகளுக்கு கொடுத்த முக்கியத்துவமே அது. பூச்சிகள் தாக்காதபடிக்கு அவன் இலைகளுக்கு மருந்து அடிப்பதும், இலைகளை வேறு ஆடு மாடுகள்
மேயாத படிக்கு வேலியடைத்ததையும் பார்த்த மாடு, "இலைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது " நான் சாப்பிடுவதால் தான் என்று புரிந்து கொண்டது. அதுவும் கடைசியில் நெற்கதிர் விளைந்த பிறகு அதில் இருக்கும் மணிகளை உதிர்க்க முதலாளி கதிர்களை கட்டி தரையில் அடிக்கும் போது மாடு இப்படியாக உணர்ந்தது " என் உணவிற்காக அதில் இருக்கும் நெல்மணிகளை களைந்து விட்டு, வைக்கோலை ( நெல் இலைகள்) பத்திரப்படுத்துகிறான் என்று.
வருத்தப்பட வேண்டிய ஒன்று கடைசி வரை அதன் முதலாளி நெல் மணிகளுக்ககத்தான் இவ்வளவு காரியங்களைச் செய்தான் என்று அந்த மாட்டிற்கு புரியவில்லை.
இயேசு இந்த உலகில் வந்து இறையரசை மையப்படுத்தியே தன் பணிகளைச் செய்தார். ஆனால் அவர் செய்த பல காரியங்கள் உலக வாழ்வுக்கும் உகந்ததாக இருப்பதால், மாடு வைக்கோலுக்காக முதலாளி கடினப்படுகிறார் என்று நினைத்தது போல, இயேசு உலக வாழ்வுக்காக எல்லாவற்றையும் செய்பவர் என்று எண்ணி, அவரின் இறையரசின் நோக்கத்தை அற்பமாய் எண்ணுகின்றனர்.
S. மெர்லின்.
ஆசிரியர், விதைகள் பத்திரிகை

.png)

Comments
Post a Comment