நல்ல நிலமாகு நண்பா ஊழியத்தைப் பற்றி

 நல்ல நிலமாகு நண்பா ஊழியத்தைப் பற்றி

கர்த்தருடைய பெரிதான கிருபையினால் 2018-ஆம் ஆண்டு  “நல்ல நிலமாகு நண்பா” என்னும் ஊழியம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கிய, திரு. எஸ். மெர்­லின், கண்ணணூர் அவர்கள், ஆரம்பத்தில் “விதைகள்” என்னும் பத்திரிக்கையினை எண்மின் ஊடகத்தின் வழியாய் மாதந்தோறும் வெளியிட்டு வந்தார். சிறந்த ஆவிக்குரிய செய்திகளைத் தாங்கி தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இப்பத்திரிக்கையை எவ்வித சபைப் பாகுபாடுமின்றி பலர் படித்து பயன் பெறுகின்றனர்.

கர்த்தர் கொடுத்த தரிசனத்தால் சுவிஷேசப் பணியைக் கருத்தில் கொண்டு, ஒரு குழு அமைத்து ஊழியம் செய்ய தீர்மானித்து 2023 -ம் ஆண்டு  “நல்ல நிலமாகு நண்பா" ஊழியத்தை ஒரு டிரஸ்டாகப் பதிவு செய்தோம்.  திரு. எஸ். மெர்லி­ன், மேனேஜின் டிரஸ்டியாகவும், திரு. ஜெ.ஜாண் டேனியல் செயலாளராகவும், திரு. சி. ஜெ. கிங்ஸ்­ பொருளாளராகவும், திரு. ஞானையா, கணக்கராகவும் இந்த டிரஸ்டில் உள்ளனர்
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, வேர்கிளம்பி கிளையில் “நல்ல நிலமாகு நண்பா மினிஸ்டிரீஸ் டிரஸ்ட்” என்ற பெயரில் வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.. 

​2023 செப்டம்பர் மாதத்தில் ஊழியத்திற்கான ஒரு புதிய வாசலை கர்த்தர் திறந்தார். மைலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக திரு.ஜெஸ்டின் ராஜ் அவர்கள் ஊழியம் செய்து வருகிறார்கள். அன்னாரிடத்தில் அப்பிராந்தியத்தின் ஊழியங்கள் குறித்து உரையாடியபோது, சீர்காழி பகுதியில் ஆண்டவரை அறியாத ஜனங்கள் மத்தியில் மிகப்பெரும் ஊழிய தேவைகளை குறித்து விரிவாய் அறிந்துக்கொண்டோம். எனவே திரு.ஜெஸ்டின்ராஜ் அவர்களது மேற்பார்வையின் கீழ் 9 இடங்களில் ஊழியத்தை தொடங்கி நடத்தி வருகிறோம்.

contact:
8668047378
9865431325
9488336921 

நல்ல நிலமாகு நண்பா மினிஸ்ட்ரீஸ் டிரஸ்ட்,
பதிவு எண் 52/2023,
கண்ணனூர்,
கன்னியாகுமரி மாவட்டம்,
தமிழ்நாடு.

நீங்கள் விரும்பினால் எங்கள் பணித்தளங்களை பார்வையிடலாம்



Comments